திருக்குறள்- வான்சிறப்பு

  • குறள் பால்  :- அறத்துப்பால். 
  • குறள் இயல்:-  பாயிரவியல்.
  • அதிகாரம்   :-  வான்சிறப்பு.
  • திருக்குறள் :-  11- 20 .





2.வான்சிறப்பு(குறள் 11 To 20)
மு.வரதராசனார் விளக்க உரை:
மழை பெய்ய உலகம் வாழ்ந்து வருவதால், மழையானது உலகத்து வாழும் உயிர்களுக்கு அமிழ்தம் என்று உணரத்தக்கதாகும்.
மு.வரதராசனார் விளக்க உரை:உண்பவர்க்குத் தக்க உணவுப் பொருள்களை விளைவித்துத் தருவதோடு, பருகுவோர்க்குத் தானும் ஓர் உணவாக இருப்பது மழையாகும்.
மு.வரதராசனார் விளக்க உரை: மழை பெய்யாமல் பொய்படுமானால், கடல் சூழ்ந்த அகன்ற உலகமாக இருந்தும் பசி உள்ளே நிலைத்து நின்று உயிர்களை வருத்தும்.
மு.வரதராசனார் விளக்க உரை: மழை என்னும் வருவாய் வளம் குன்றி விட்டால், உணவுப் பொருள்களை உண்டாக்கும் உழவரும் ஏர் கொண்டு உழமாட்டார்.
மு.வரதராசனார் விளக்க உரை: பெய்யாமல் வாழ்வைக் கெடுக்க வல்லதும் மழை; மழையில்லாமல் வளம் கெட்டு நொந்தவர்க்கும் துணையாய் அவ்வாறே காக்க வல்லதும் மழையாகும்.

விளக்கம் :வானத்திலிருந்து மழைத்துளி வீழ்ந்தால் அல்லாமல், உலகத்தில் ஓரறிவுயிராகிய பசும்புல்லின் தலையையும் காண முடியாது.
குறள் விளக்கம்:  மேகம் கடலிலிருந்து நீரைக் கொண்டு அதனிடத்திலேயே பெய்யாமல் விடுமானால், பெரிய கடலும் தன் வளம் குன்றிப் போகும்.
 குறள் விளக்கம்: மழை பெய்யாமல் போகுமானால் இவ்வுலகத்தில் வானோர்க்காக நடைபெறும் திருவிழாவும் நடைபெறாது; நாள் வழிபாடும் நடைபெறாது.
மழை பெய்யவில்லையானால், இந்த பெரிய உலகத்தில் பிறர் பொருட்டு செய்யும் தானமும், தம் பொருட்டு செய்யும் தவமும் இல்லையாகும்.
எப்படிப்பட்டவர்க்கும் நீர் இல்லாமல் உலக வாழ்க்கை நடைபெறாது என்றால், மழை இல்லையானால் ஒழுக்கமும் நிலைபெறாமல் போகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக